Saturday, 26 September 2015

எனக்கு ஒரு ஆசை!

         என் பெயர் க.நிறைமதி வதனா. என் அம்மா பெயர் சோ. மைதிலி. என்அப்பா பெயர் ச.கஸ்தூரிரெங்கன். என் தங்கை பெயர் க.மகிமா. நாங்க எல்லாரும் எங்க பாட்டியோட புதுக்கோட்டையில இருக்கிறோம். இப்போ நான் பதிவர் ஆகிட்டேன்.


         போனதடவை மதுரைக்கு பதிவர்விழா சென்றபோது,  நான் அப்பா, அம்மா, நிலவன் மாமா, மாலதிஅத்தை,ஜெயா பாட்டி, மகாசுந்தர்மாமா, ஸ்டாலின் மாமா, கீதா பெரியஅம்மா, அனு அக்கா எல்லாரும் ஒரே கார்ல போணோம். அங்க கிரேஸ் ஆன்டி வீட்டுக்கு போனேன். இந்த தடவை புதுக்கோட்டைல பதிவர் விழா நடக்குது. நீங்க எல்லாரும்  அவசியம் வரவண்டும். இங்க உங்களை எல்லாம் பாக்கனும். அதுதான் ஆசை. வருவிங்களா?

41 comments:

 1. சரி சரி...
  எம்.எல்.ஏவே உங்ககிட்ட பாடம் எடுக்கணும் போல...
  வாழ்த்துக்கள் தொடர்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அப்பா - நிறைமதி

   Delete
 2. இணையத்தின் இளைய பதிவருக்கு வணக்கங்களும் என் முதல் பின்னூட்டக்காரருடன் தொடர்கின்ற நல்வாய்ப்பிற்கு வாழ்த்துகளும்.!!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜூ அங்கிள்! உங்கள மாதிரி நிறைய புக்
   படிக்கணும்னு அம்மா என்கிட்டே சொல்லுவாங்க.

   Delete
 3. முதல் பதிவிலேயே
  எங்களுக்கெல்லாம் வரவேற்பு
  அருமை
  வலையிலும் வாழ்விலும் வெற்றி பெற
  நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அங்கிள். நீங்க இதை வாட்ஸ் up ளையும் போட்டதுக்கு நன்றி!

   Delete
 4. வதனமோ சந்திர பிம்பமோ...? நிறைவான அறிமுகம்தான் என்னே!

  வாவ்... இன்னும் அந்த மேஜிக் தொடர்கிறதா செல்லம்...!

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அங்கிள் , இன்னும் நிறைய கத்துக்கிட்டேன். நன்றி!

   Delete
 5. அம்மா மாதிரி நிறைய எழுத வாழ்த்துக்கள் டா குட்டி.

  ReplyDelete
 6. ஆஹா.... நீங்களும் வலைப்பூ தொடங்கிட்டீங்களா?

  வாழ்த்துகள் செல்லம்......

  ReplyDelete
  Replies
  1. நன்றி டெல்லி அங்கிள்-நிறைமதி

   Delete
 7. நிறைச் செல்லம்..கலக்கிட்டடா. உன் முதல் பதிவில் என் பெயரும் கண்டு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. உனக்கு என் அன்புமுத்தங்கள். எழுத்தில் அம்மாவையும் அப்பாவையும் மிஞ்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்டா செல்லம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரேஸ் ஆன்டி-நிறைமதி'

   Delete
 8. மைதிலியின் புன்னகை - பெயர் ரொம்ப நல்லாருக்குடா. அம்மாக்கு எப்போதும் புன்னகை இருக்கும் :)

  ReplyDelete
 9. வாழ்த்துகள்டா தங்கம்!
  ஆரம்பமே அமர்க்களமா இருக்கு..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாமா-நிறைமதி. உங்க பேரையும் blog ல எழுதி இருக்கிறேன் பாத்திங்களா?

   Delete
 10. ஆஹா நாம போன மதுரை வலைப்பதிவர் விழாவ மறக்கவே முடியாதுல்ல...நசுங்கிப்போனாலும் மகிழ்வுடன் போனோம்ல....வாழ்த்துகள் செல்லம் நிறய எழுதுடா குட்டி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பெரிய அம்மா, உங்ககூட எந்த ட்ரிப் போனாலும் மறக்கமுடியாம இருக்கும்.-நிறைமதி

   Delete
 11. வாழ்த்துக்கள் நிறைமதி வதனா/

  ReplyDelete
  Replies
  1. நன்றி விமலன் அங்கிள்-நிறைமதி

   Delete
 12. வாழ்த்துக்கள்... நிறைய எழுதுங்க... நிறைவாய் எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார் அங்கிள் - நிறைமதி

   Delete
 13. செல்லக்குட்டிக்கு வாழ்த்துகள் . நான் யாருன்னு தெரியலைன்னா அம்மா அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.... நான் உனக்கு மாமா முறை வேணும்... நான் ஒரு வாலு மாமா ரொம்ப சேட்டை பண்ணி லூட்டி அடிப்பேன்

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்படிதான். உங்களைப் பத்தி அம்மா முன்னாடியே சொல்லிடாங்க. நீங்க எனக்கும் blog head டிசைன் பண்ணி தருவீங்கனு சொன்னாங்க. செஞ்சுதருவீங்களா அங்கிள். நன்றி- நிறைமதி

   Delete
 14. அடடா! நிறைமதிக்கு அறிமுகம் தேவையா? நீ வலையுலகின் செல்லக் குழந்தையடா. அநேகமாக ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை வலைப்பக்கம் தொடங்குமுன்னே நீ அறிமுகம்டா செல்லம். வலைப்பக்கம் தொடங்கியாச்சு இனி சொல்லவா வேணும்! உங்கள் மழலைத் தமிழால் கணினித் தமிழை ஆள வாழ்த்துகள் டா மருமகளே..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ஹாப்பி யா இருக்கு மாமா. நன்றி மாமா-நிறைமதி.

   Delete
 15. வாழ்த்துக்கள் நிறை. முதல்ல உங்க வீட்டுக்குத்தான் வரபோறோம் சாப்பாடு டிபன் ரெடியா இருக்கணும் .ஓ.கே.வா

  ReplyDelete
  Replies
  1. ஓகே அங்கிள். அம்மாகிட்ட சொல்லி ரெடி பண்ணசொல்லுறேன். அவசியம் வாங்க. நன்றி அங்கிள்-நிறைமதி.

   Delete
 16. புதுகைக்கு வரும்போது அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்

  ReplyDelete
 17. வாழ்த்துகள் நிறைமதிவதனா! புதுக்கோட்டையில் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாக இருந்தேன். ஆனால்... நிறைய தடைக்கற்கள் முன்னே நிற்கின்றன. இப்போது இல்லாவிடினும் விரைவில் புதுகை வருவேன் உங்களை எல்லாம் சந்திக்க! நன்றி!

  ReplyDelete
 18. குட்டிப்பதிவர் நிறைமதி வதனாவுக்கு இந்த அத்தையின் அன்பும் ஆசிகளும்... எழுத்துலகில் அம்மா அப்பாவைப் போல் சிறந்து விளங்க இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. அட! குடும்பமே பதிவராயிடுச்சுல்ல....அப்பாவும், அம்மாவும் தனித்தனியா 8 அடி பாஞ்சாங்கனா....16 அடி இல்லையா...அப்போ நீங்க 32 அடி பாய்வீங்களோ....யம்மாடியோவ் உங்க அத்தை, உங்க மாமா எல்லாம் எங்க போறது!!!!!

  சூப்பர்! கலக்குங்க நிறை!

  எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இரு கரம் நீட்டி உங்களை வரவெற்கின்றோம்....

  ReplyDelete
 20. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 21. அடடா நிறைக்குட்டி வாழ்த்துக்கள் மா! அன்னிக்கே வரணுமின்னு பார்த்தேன்மா முடியலைடா. sorrymma ! தங்கள் அன்பான வரவேற்பு கேட்டு உடனும் வர ஆசைதான் உங்களை எல்லாம் பார்க்க என்ன செய்வது தொலை தூரத்தில் இருக்கிறேனே. இருந்தாலும் நேரடி ஒளிபரப்பில் உங்களை எல்லாம் கண்டு மகிழ்கிறேன்மா. தமிழ் ஓங்கி வளர நீங்கள் வித்து. அடிச்சு தூள் பணிடும்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! உங்கம்மா என் செல்லமாக்கும் தெரியுமா?

  ReplyDelete
 22. குட்டி பாப்பாவையும் பதிவராக்கியாச்சி. அசத்தல்

  ReplyDelete
 23. அன்பிற்கினிய நிறைமதி!

  இந்தப் பிஞ்சு வயதிலேயே கணினியில் தமிழ் வளர்க்க உன் போன்றவர்கள் முன்வருவது கண்டு புளகாங்கிதமடைகிறேன்! உங்களைப் போல் சிறுவர்கள் ஆங்காங்கே இப்படிப் பதிவுலகுக்கு வருவதைப் பார்க்கையில் எத்தனை அரசியல் - ஆட்சி அடக்குமுறைகள் வந்தாலும் தமிழ் வருங்காலத் தலைமுறையிலும் வாழ்வாங்கு வாழும் எனும் நம்பிக்கை தளிர்க்கிறது. உனக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்து மகிழ்கிறேன்! அடுத்தடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

  நன்றி! வணக்கம்!

  ReplyDelete
 24. வணக்கம்...

  தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 25. பெப்பிக்குட்டிக்கு வாழ்த்துக்கள் அப்புறம் இந்த அத்தை தாமதமாகவந்ததற்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்?
  பெப்பிம்மா சினேகா அக்காவைவிட அதிகமா நீஎழுதனு சரியா? பாய் பெப்பி...

  ReplyDelete