Tuesday 6 October 2015

உலக சிறந்த உணவு .

    
கோர்டன் ராம்சே.


    என் அம்மா எனக்கு வாழைக்காய் சமைத்து தந்தாங்க. அப்ப  நான் சொன்னேன். நீங்கள் தான் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் குக். அதுக்கு அம்மா சொன்னாங்க ராம்சே கேட்டா தூக்கு போட்டுக்குவாங்க. அதுக்கு நான் சொன்னேன் ராம்சே தான் உலகத்துலே சிறந்த சமையல்காரரா? அம்மா சொன்னங்க" ஆமா நிறை, நீ கிச்சன் நைட் மேர் பாத்துருக்கல அப்டீனாங்க. 



எனக்கு ஒரு சந்தேகம். உலகத்துல உள்ள எல்லாரும் ராம்சே சமைச்சத சாப்பிடிருக்காங்களா? இல்லல. அப்புறம் எப்படி அவங்களுக்கும் சேர்த்து சாப்பிட்டவங்க மட்டும் முடிவு எடுக்கலாம்? ஒரு பிச்சைக்காரர் ஒரு தடவையாச்சும் ராம்சே சமைக்கிற   சாப்பாட்டை சாப்பிட முடியுமா அம்மா? இல்லைடா! அது ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் அப்டின்னு சொல்றாங்க அம்மா. உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் கிடைக்காத ஒரு உணவே எப்படி உலகத்திலே சிறந்த உணவா இருக்க முடியும்? காக்காமுட்டை படம் பாத்தீங்களா? அதுல அந்த பையன் சொல்ற மாதிரி ஒரு வேளை நமக்கும் ராம்சே யோட சாப்பாட்டை விட நம்ம அப்பத்தா செஞ்ச தோசை நல்லாயிருக்கலாம். அதுவும் இல்லாம ஒரு வேளை உலகத்தில எல்லாருக்கும் அப்படி ராம்சே சமைத்த உணவ சாப்பிட கொடுத்தா, கண்டிப்பா எல்லாரும் அதை விரும்புவாங்கனு சொல்லமுடியாது. எனக்கு ஸ்வீட் புடிக்கும், மகிக்கு காரம் பிடிக்கும். அப்புறம் எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி பிடிக்கும்? கடைசியா அம்மா கேட்டாங்க இப்போ நீங்க என்னதான் சொல்லவரீங்க மேடம். நான் சொன்னேன் உலகத்தில எல்லாருக்கும் பிடிச்ச ஒரு உணவு இருக்கு. அது தான் அவங்க அம்மா சமைச்ச உணவு. எல்லாருக்கும் world பெஸ்ட் குக் அவங்க அம்மா தான். I like your fry very much. நீங்க தான் எனக்கு world பெஸ்ட் குக். நான் சொன்னது கரக்ட் தானே.

டிஸ்கி:

பாதி டைப் பண்ணும் போதே நிறை ரொம்ப களைச்சுட்டா. அப்புறம் அவள் சொல்ல நான் டைப் பண்ணினேன். ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டு எல்லாரையும் காக்க வைச்சதுக்கு(!?) மன்னிப்பு கேட்பதாக சொல்லச் சொன்னாள்; டிஸ்கியும், படமும்  மட்டும் மைதிலி:)



32 comments:

  1. குழந்தையை டைப்பண்ண அடிக்கடி சொல்லாதீங்க அதற்கு பதில் அவங்களை தன் எண்ணங்களை தாளில் எழுத சொல்லுங்கள் அதை நீங்கள் டைப் அடித்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓகே பாஸ்! என்ன இருந்தாலும் தாய் மாமா இல! அவ்ளோ அக்கறை:)

      Delete
  2. எனக்கு ஸ்வீட் புடிக்கும், மகிக்கு காரம் பிடிக்கும். இந்த விஷயத்தில் மகி என் கட்சி ஆளாகிவிட்டாள்

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்!! அங்கயும் அவளுக்கு சப்போர்ட்டா?:(

      Delete
  3. //எனக்கு ஸ்வீட் புடிக்கும், // அப்ப நான் உங்கவீட்டிற்கு வந்தா கேசரி பண்ணிதாரேன்.
    //மகிக்கு காரம் பிடிக்கும்./// அவளுக்கு ஊறுகாய் போட்டுதாரேன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கேசரி பிடிக்கும் அங்கிள், ஆனா மகிக்கு ஊறுகாய் பிடிக்காது, முறுக்கு தான் பிடிக்கும்!

      Delete
  4. நிறை நீ என் சமையலை சாப்பிட்ட பிறகு அங்கிள்தான் உலகத்திலே பெஸ்ட் குக் & மை பேவரைட் குக் என சொல்லுவாய் என்பது நிச்சயம்..

    ReplyDelete

  5. // I like your fry very much. /// இப்ப புரியது உங்க அம்மா சமையலை நீ ஏன் புகழ்கிறாய் என்பது fry பிடிக்காதா குழந்தைகள் இருக்குமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. அம்மா சப்பாத்தி , தால், திணை பாயசம், சாண்ட்விச் எல்லாம் நல்லா செய்வாங்க அங்கிள்.

      Delete
  6. ராம்சே. சமைச்ச உணவை நீ சாப்பிட்டால் அவன் முகத்திலே காரி துப்புவாய்.... இந்திய உணவை சாப்பிட்ட பிறகு அமெரிக்கன் உணவை சாப்பிடவே பிடிக்காது

    ReplyDelete
    Replies
    1. இல்ல அங்கிள். நான் யாரும் புண்படுத்துற மாதிரி பேசமாட்டேன். அதுவும் இல்லாம அவர் என்னைவிட பெரியவர். அவருகிட்ட எனக்கு பிடிக்காததே கிச்சன் நைட் மேர் ப்ரோக்ராம் ல எல்லாரையும் HURT பண்ணுற மாதிரி திட்டுறது தான் தெரியுமா.

      Delete
  7. தலைப்பைப் பார்த்ததுமே 'அம்மாதான்' என்று மனம் பதில் சொன்னது. யாரது ராம்சே? எனக்குத் தெரியாதே..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அங்கிள். அவர் அமெரிக்கன் ரியாலிட்டி ஷோ KITCHEN NIGHTMARES ல வராரு. world no 1 chef அப்டின்னு சொல்றாங்க அங்கிள்.

      Delete
  8. உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் கிடைக்காத ஒரு உணவே எப்படி உலகத்திலே சிறந்த உணவா இருக்க முடியும்?

    அருமையான நியாயமான கேள்வி,
    தாயின் சிறந்த கோவிலுமில்லை,
    தாயின் உணவினைவிட சிறந்த உணவு ஏதுமில்லைதான்,
    ஏனென்றால், தாயின் உணவில் அன்பும் கலந்தல்லவா இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா அங்கிள். நன்றி அங்கிள்.

      Delete
  9. நிறை! என்கிட்டே மட்டும் உண்மைய சொல்லனும் இது கஸ்தூரிக்கு சொன்னதுதானே?
    ********
    //என் அம்மா எனக்கு வாழைக்காய் சமைத்து தந்தாங்க. அப்ப நான் சொன்னேன். நீங்கள் தான் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் குக்//
    இப்படி குழந்தைகிட்ட பேர் வாங்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும். நீங்கதான் பெஸ்ட் டீச்சர் என்று மாணவன் சொல்வதற்கு சமம்.. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. :))) இல அங்கிள், எல்லாருக்கும் சொன்னேன். நன்றி அங்கிள்.

      *******
      நன்றி அண்ணா-மைதிலி

      Delete
  10. சின்ன குழந்தை உயர்ந்த எண்ணங்கள்! சும்மாவா? பெற்றோர்கள் ஆசிரியர்கள் அல்லவா? குழந்தை நிறைக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.

      Delete
  11. நிறைகுட்டி..கலக்கிட்டடா செல்லம். அழகா யோசிக்கற, வாழ்த்துகள்!

    மைதிலி டியர், சிறந்த குடும்பம் பல்கலைக்கழகம் ..இல்ல இல்ல பதிவர் குடும்பம் :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி!

      Delete
  12. அருமை! இந்த வயதிலேயே இவ்வளவு நுட்பமாகச் சிந்திக்கும் நீர் வருங்காலத்தில் சிறந்த சிந்தனையாளராக மலர வாய்ப்பிருக்கிறது நிறைமதி! மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டா! இன்றைய சூழலில் பெரியவர்களை விடப் படிக்கும் பிள்ளைகள்தாம் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்! தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைக்கும்பொழுது!

    ReplyDelete
    Replies
    1. உங்களை அங்கிள் ன்னு சொன்னா உங்களுக்கு பிடிக்காதுன்னு அம்மா சொன்னாங்க. நன்றி மாமா.

      Delete
    2. அடடே! மிக்க மகிழ்ச்சிம்மா!

      Delete
  13. தேங்க்ஸ் ஆன்டி!

    ReplyDelete
  14. நிறைகண்ணா... நீ சொல்றது ரொம்பக் கரெக்ட் சரியான சிந்தனை. அம்மாவின் கை மணத்துக்கு ஈடானது உலகத்துல எங்கியும் கிடைக்காது. தொடர்ந்து எழுது. நீ என்னமோ எழுதறதுல என் தங்கைய /உன் அம்மாவ/ மிஞ்சிடுவன்னு மனசுல படுது. நல்வாழ்த்துகள்டா செல்லம்.

    ReplyDelete
  15. வாவ்.. சின்ன வயசுல என்னைப் பார்த்த மாதிரியே இருக்கு.. (சிரிச்சுடாதீங்க, நிஜமா தான்..! )

    ReplyDelete
  16. ஆவி நிறை பத்தி நிறையா சொல்லி இருக்காரு.
    நிறைவா சொல்லி இருக்காரு.
    இறைவன் எல்லா கலைகளையும் உனக்கு
    குறையில்லாம கற்றுக்கொடுப்பாரு .

    சுப்பு தாத்தா வந்திருக்காக.
    மீனாச்சி பாட்டி அம்மா வந்திருக்காக.


    இந்தா இந்த சாக்லேட்டை வாங்கிக்கோ.
    எனக்கு, இல்ல எங்க ரண்டு பேருக்கும்
    சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வா.

    அப்பறம் இன்னொரு விஷயம்.
    தாத்தா வூட்டிலே கொலு வச்சு இருக்காரு.
    வந்து ஒரு பாட்டு பாடுங்களேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  17. வணக்கம் நிறைமதி. நலமா? ஆவி அங்கிளின் பதிவு வழியே வந்திருக்கிறேன். வலையுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன். பதிவர் சந்திப்புக்கு என்னால் வரமுடியவில்லை. வந்திருந்தேனென்றால் நீ சீனு அங்கிளுக்குக் கொடுத்த பல்ப் ஒருவேளை எனக்குக் கிடைத்திருக்கலாம். ஏனென்றால் நான் சீனு, ஆவி, அரசன் ஆகியோருடன் அவ்வளவு நெருக்கம். வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. cute and intelligent !! நிறையா யோசிக்கனும் ! நிறையா எழுதனும் ! :) :)

    ReplyDelete
  19. \\\\இல்ல அங்கிள். நான் யாரும் புண்படுத்துற மாதிரி பேசமாட்டேன். அதுவும் இல்லாம அவர் என்னைவிட பெரியவர். அவருகிட்ட எனக்கு பிடிக்காததே கிச்சன் நைட் மேர் ப்ரோக்ராம் ல எல்லாரையும் HURT பண்ணுற மாதிரி திட்டுறது தான் தெரியுமா.///
    ம்..ம் உண்மை தாம்மா நிறை. உங்கள் பேச்சு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா நல்ல எண்ணங்கள் அம்மா மாதிரியே. very குட். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
    நான்|(ராம்சே ) அவரோட சாப்பாடு சாப்பிட்டேன் நன்றாகவே இருந்தது. ஆனாலும் மைதிலியின் கைப்பக்குவம் வருமா என்ன. எனக்கும் சாப்பிட ஆசை வந்து விட்டதே இப்போ வரலாமா? எனக்கும் கிடைக்குமில்ல. ஹா ஹா ... நிறைக் குட்டி நல்ல எழுதுகிறீர்கள் மேலும் எழுத என் வாழ்த்துக்கள் ...!நிறை உங்களை நான் பார்த்தேனே பிங்க் டிரஸ் சோட சொ cute ம்மா ..

    ReplyDelete