Sunday 29 November 2015

அதிசயப்பெண் தான் மலாலா

ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும்  போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க.          

Tuesday 6 October 2015

உலக சிறந்த உணவு .

    
கோர்டன் ராம்சே.


    என் அம்மா எனக்கு வாழைக்காய் சமைத்து தந்தாங்க. அப்ப  நான் சொன்னேன். நீங்கள் தான் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் குக். அதுக்கு அம்மா சொன்னாங்க ராம்சே கேட்டா தூக்கு போட்டுக்குவாங்க. அதுக்கு நான் சொன்னேன் ராம்சே தான் உலகத்துலே சிறந்த சமையல்காரரா? அம்மா சொன்னங்க" ஆமா நிறை, நீ கிச்சன் நைட் மேர் பாத்துருக்கல அப்டீனாங்க. 

Saturday 26 September 2015

எனக்கு ஒரு ஆசை!

         என் பெயர் க.நிறைமதி வதனா. என் அம்மா பெயர் சோ. மைதிலி. என்அப்பா பெயர் ச.கஸ்தூரிரெங்கன். என் தங்கை பெயர் க.மகிமா. நாங்க எல்லாரும் எங்க பாட்டியோட புதுக்கோட்டையில இருக்கிறோம். இப்போ நான் பதிவர் ஆகிட்டேன்.


         போனதடவை மதுரைக்கு பதிவர்விழா சென்றபோது,  நான் அப்பா, அம்மா, நிலவன் மாமா, மாலதிஅத்தை,ஜெயா பாட்டி, மகாசுந்தர்மாமா, ஸ்டாலின் மாமா, கீதா பெரியஅம்மா, அனு அக்கா எல்லாரும் ஒரே கார்ல போணோம். அங்க கிரேஸ் ஆன்டி வீட்டுக்கு போனேன். இந்த தடவை புதுக்கோட்டைல பதிவர் விழா நடக்குது. நீங்க எல்லாரும்  அவசியம் வரவண்டும். இங்க உங்களை எல்லாம் பாக்கனும். அதுதான் ஆசை. வருவிங்களா?