ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க.
எனக்கு கார்ட்டூன் பார்க்கணும்னு தோணுச்சு. ஆனா ஹிஸ்டரி சேனல் பார்க்க பார்க்க, எனக்கும் பிடிச்சுப் போச்சு. அந்த சேனல்ல மலாலா பேசிக்கிட்டுருந்தாங்க. அந்த நிகழ்ச்சி பேரு Malala - shot for going to school. உண்மையாவே துப்பாக்கியால சுட்டும் அவங்க ஸ்கூல்க்கு போக ஆசை படுறாங்கன்னா அது அதிசயம் தான்.
தாலிபான் தீவிரவாதிகள் ஸ்கூல்க்கு போக கூடாதுன்னு மிரட்டி கூட அவங்க ஸ்கூல்க்கு போனாங்க. எல்லோரும் பேட்டி கொடுக்க பயந்தபோதும், மலாலா துணிச்சலா பேட்டி கொடுத்தாங்க. அதுல டெஸ்க், பெஞ்ச் இல்லனா கூட ஸ்கூல் போய் படிப்பேன் சொன்னாங்க.
அந்த பேட்டி குடுத்ததுக்காக, ஒரு தீவிரவாதி மலாலாவை சுட்டுவிட்டான். அவங்க சேர்ந்திருந்த மருத்துவமனையில் கூட துணிச்சலா இருந்தாங்க. அவங்களுக்காக கவலைப்படல, அவங்க அப்பாவை தீவிரவாதிகள் சுட்டுடக் கூடாதுன்னு கவலைபட்டாங்க. அவங்கள யாரு அந்த மருத்துவமனை சேர்த்தது, அப்பாவுக்கு அங்க கொடுக்க பணம் இல்லையேன்னு கவலைபட்டாங்க.
ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு ஆசிரியர், ஒரு மாணவர் இந்த உலகத்தை மாத்த முடியும்னு மலாலா சொன்னாங்க. மழை வந்தா லீவ் விடுவாங்களான்னு நாம நியூஸ் பாக்கிறோம். இத்தனைக்கு பிறகும் ஸ்கூல்க்கு போக ஆசைப்படும் மலாலா ஒரு அதிசயப் பெண் தானே!
மாலா மட்டும் அதிசயப் பெண் அல்ல அந்த ஆவணப் படத்தை பார்த்து மனதில் வாங்கி புரிந்து அதை பற்றி நாலுவரி எழுதிய நீயும் அதிசயப் பெண்தான். பாராட்டுக்கள் நிறை
ReplyDeleteரொம்ப நன்றி அங்கிள்
Delete- நிறைமதி
அந்த மாலாவை போல தைரியமான பெண்ணாக நீயும் வர வேண்டும். வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் . உனக்கு கிடைத்த மிக அதிர்ஷ்டம் உனது பெற்றோர்கள் இருவரும்தான். அதற்கு நீ மிக மிக கொடுத்து வைத்திருக்கிறாய் சாதித்து காட்டு வெற்றி பெரும் போது இந்த மாமவின் பெயரை மட்டும் மறந்துவிடாதே
ReplyDeleteகண்டிப்பா வருவேன் அங்கிள். உங்களையும் மறக்கமாட்டேன்
Delete-நிறைமதி
நிறைவாய் எழுதுகிறாய் நிறை.. இன்னும் 'நிறை'ய எழுத வேண்டும், சரியா?
ReplyDeleteசரி அங்கிள். ரொம்ப நன்றி
Deleteநல்ல புரிதல் டா நிறைமா! நீயும் சாதிக்கவேண்டும்
ReplyDeleteநன்றி ஆண்ட்டி
Deleteநிறை ரொம்ப அழகா எழுதியிருக்க.. வாழ்த்துக்கள் டா செல்லக்குட்டி..
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி
Deleteஆயுதம் அவளோடு பேசிய போதும் தைரியத்தைப் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தவள்...சின்ன வயசானாலும் துணிச்சல் வாலிபம் கொண்டது வாழ்த்துக்கள் மலாலா !
ReplyDeleteஆமா அங்கிள் ! அந்த நிகழ்ச்சி பார்க்கும்போது எங்கும் ஆச்சரியமா இருந்தது
Deleteஆமாம்டா உன்னிலும் மலாலா இருக்கின்றார்...சாதனைப்பெண்ணாக வாழ்த்துகள்....
ReplyDeleteஅப்படியா பெரியம்மா. ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் பெரியம்மா
Deleteஅந்தச் சிறுமி நிச்சயம் அதிசயப் பெண்தான். அவள் கருத்தை ரசித்து உள் வாங்கிக் கொண்டு எங்களுக்கும் பகிர்ந்திருப்பது வெகு சிறப்பு நிறை. தொலைக்காட்சியில் நல்ல விஷயங்களும் பார்க்கக் கிடைக்கின்றன என்பது புரிகிறதுதானே... நிறையப் பார்த்து, படித்து, நிறைய எழுதவும்.
ReplyDeleteநிறைச்செல்லம், ஆவணப் படம் பார்த்து கருத்தா பதிவும் எழுதும் உனக்கு வாழ்த்துகளும் பாராட்டும். இன்னும் நிறைய எழுதுடா :-)
ReplyDeleteலீவ் விட்டாலும் நல்ல விஷயங்களை பாத்து தெரிஞ்சிக்கிட்டிருக்க . அழகா எழுதியும் இருக்க. உன் வகுப்பு நண்பர்களுக்கும் சொல்லுங்க. வாழ்த்துக்கள் மகிழ்நிறை.
ReplyDeleteமலாலா = மன உறுதி
ReplyDeleteகட்டுரையின் தொடக்க வரிகளிலேயே என் தம்பிகளின் (சித்தி மகன்கள்) நினைவுதான் வந்தது. 'இத்தனை நாள் விடுமுறை விட்டும் இவர்கள், இன்னும் மழை பெய்யாதா, விடுமுறை தொடராதா என ஏங்குகிறார்களே, மலாலா தன் உயிருக்கே கண்டம் வந்தும் படிப்பைத் தொடர்ந்தாரே!' என வியந்தபடிதான் படித்தேன். கடைசியில் நீங்களும் பதிவை அக்கருத்துடனே முடித்திருந்த விதம் அருமை நிறை! ஹிஸ்டரி தொலைக்காட்சி தொடர்ந்து அவ்வப்பொழுது பாருங்கள்! அறிவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் பல நிகழ்ச்சிகள் அதில் வருகின்றன.
ReplyDeleteமலாலா ஒரு வீர மங்கை
ReplyDeleteமலாலா பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன்
நேரமிருக்கும் பொழுது பாருங்கள்
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeletehttp://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி